Friday, March 18, 2011

நான்காவது அணி!

ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
 உலக நவரச நாயகன்,

 மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

நான்காவது அணி! 
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம்   ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல் 
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும்  வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
 மேக்கப்    போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்... 
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல்   செவ்வி
 மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,  
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர்   சூட்டி  ) நாய்கள் பிரசவம் முடிந்து  ஊட்டுக்கு   திரும்பும் வரை    நாய் சோப்பு  முதல் நண்டு  சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி 
 பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!
  
அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு,  குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்! 
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

No comments:

Post a Comment